← முகப்பு செய்திகள்

IPL 2026- Krunal Pandya on winning 5 IPL Trophies in 5 Finals

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
IPL 2026- Krunal Pandya on winning 5 IPL Trophies in 5 Finals

அகமதாபாத்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா இருக்கின்றார். 35 வயதான குர்னல் பாண்டியா ஆர் சி பி அணிக்கு வந்த பிறகு இரண்டு கோப்பையை அடுத்தடுத்து ஆர்சிபி அணி கைப்பற்றி இருக்கிறது.

நடப்பு சீசனில் குர்னல் பாண்டியா 16 போட்டிகள் விளையாடி 226 ரன்கள் முக்கிய கட்டத்தில் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 37 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 145 என்று அளவிலும் உள்ளது. கீழ் வரிசையில் களமிறங்கி அபாரமாக விளையாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் குர்னல் பாண்டியா கலக்கி இருக்கின்றார்.

16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருடைய எக்னாமி 8.41 என்று அளவிலே இருந்தது. இது ஆர்சிபி யின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது. அது மட்டுமல்லாமல் விளையாடிய ஐந்து இறுதிப் போட்டியிலும் வென்று ஐந்து கோப்பைகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை குர்ணல் பாண்டியா படைத்தார்.

IPL 2026: சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கும் ஆறுதல் பரிசு

இது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு ஐபிஎல் கோப்பையும் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது தான். அது எனக்கு குழந்தைகளை போல் மாறிவிட்டது. குழந்தைகளில் உங்களுக்கு பிடித்த குழந்தை யார் என்று கேட்டால், நமக்கு தேர்வு செய்ய முடியாது. அதேபோல்தான் எனக்கு ஐபிஎல் கோப்பைகளும். ஏனென்றால் ஒவ்வொரு கோப்பையும் நான் கடுமையாக உழைத்து வென்று இருக்கின்றேன்.

இந்த 11 ஆண்டுகளில் நான் ஐந்து கோப்பையை வென்றதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். உண்மையிலே இது என் வாழ்க்கையில் ஸ்பெஷலான தருணம். ஆர் சி பி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அணி நிர்வாகிகள், பயிற்சியாளர் குழுவினர் தான். தினேஷ் கார்த்திக், ஆண்டி பிளவர் போன்றவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

நாங்கள் ஐபிஎல் ஏலத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஒரு அணியை உருவாக்கி இருந்தோம். ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டாலே பாதி வெற்றியை பெற்று விடுவோம். நாங்கள் அதில் சிறப்பான பணியை செய்தோம் என்று நினைக்கின்றேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் தொடர்ந்து இரண்டு கோப்பைகளை வென்று இருக்கின்றோம்.

IPL 2026: ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு காரணம்.. இடையில் எங்களுக்கு ஒரு சிக்கல் வந்தது- விராட் கோலி

இந்த கோப்பை ஆர் சி பி ரசிகர்களுக்கானது. இதேபோன்று விராட் கோலிக்கும் இந்த கோப்பை மிகவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் அவர் 18 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து தற்போது இரண்டு கோப்பையை வென்றிருக்கிறார். இது உண்மையிலேயே நல்ல விஷயம் என குர்னல் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
09 Jun 2026
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
09 Jun 2026
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net