← முகப்பு செய்திகள்

IPL 2026 Final Pitch Analysis: RCB Vs GT At Narendra Modi Stadium-

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 37 பார்வைகள்
IPL 2026 Final Pitch Analysis: RCB Vs GT At Narendra Modi Stadium-

மும்பை: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் பிட்ச் தயாரிப்பு செய்யப்படுவதால், களம் இரு அணிக்கும் சமமாக இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

நரேந்திர மோடி ஸ்டேடியம் குஜராத் டைட்டன்ஸின் சொந்த மைதானமாக இருந்தாலும், இறுதிப் போட்டியில் தங்கள் விருப்பப்படி பிட்சை மாற்ற முடியாது என்பதால், அவர்களுக்கு எந்தவித சொந்த மைதானப் பலனும் இருக்காது என்று சேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் மிக வலிமையான அணியாக விளங்கியது. இங்கு ஆடிய கடைசி நான்கு போட்டிகளிலும் ஜி.டி. வென்றது. இதில் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் RCB-க்கு எதிரான ஒரு லீக்-கட்ட வெற்றியும் அடங்கும். இருப்பினும், ப்ளேஆஃப் சுற்றுகளில் பிட்ச் தேர்வு மற்றும் தயாரிப்பு பிசிசிஐயின் பொறுப்பிலேயே இருக்கும்.

நரேந்திர மோடி மைதானத்தில் ‘ரன் அசுரனாக’ மாஸ் காட்டும் சுப்மன் கில்: வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

இது குறித்து பேசிய சேவாக், "RCB விளையாடும் கிரிக்கெட் மிகவும் சிறப்பானது. என் கணிப்பில், இது நேர்மையான 50-50 போட்டி. இது GT-யின் சொந்த மைதானம் என்றாலும், இறுதிப் போட்டி என்பதால், அவர்கள் விரும்பியபடி பிட்சை உருவாக்க முடியாது, எனவே அந்த அனுகூலம் கிடைக்காது," என்றார்.

"இது இறுதிப் போட்டி என்பதால் பிசிசிஐ தான் விக்கெட்டைத் தயார் செய்யும், எனவே களம் சமமாக இருக்கும். RCB-யை வெல்ல குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் ஆடியது போல விளையாட வேண்டும்," என்று சேவாக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி சற்று மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். அகமதாபாத்தில் தான் போட்டி நடப்பதால் குஜராத் டைட்டன்ஸுக்கு ஒரு சிறிய அனுகூலம் நிச்சயம் இருப்பதாக அவர் தெரிவித்தார். "அவர்கள் குவாலிடிபையர் 2வில் ஆடியது போல விளையாடினால், வெற்றியாளர்களாக மாறக்கூடும்," என்றும் திவாரி நம்பிக்கை தெரிவித்தார்.

IPL 2026: விராட் கோலி பைனலில் என்ன ரெக்கார்ட் வைத்திருக்கிறார் தெரியுமா?

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பதிவு கலவையாகவே தெரிகிறது. கடந்த சீசனில் இதே மைதானத்தில் RCB தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றிருந்தாலும், 2021 முதல் இங்கு ஆடிய எட்டுப் போட்டிகளில் தலா நான்கு வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net