← முகப்பு செய்திகள்

IPL 2026- Bhuvneshwar Kumar Sets Powerplay Wicket Record In IPL 2026 and

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
IPL 2026- Bhuvneshwar Kumar Sets Powerplay Wicket Record In IPL 2026 and

ஐபிஎல் 2026 தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில், புவனேஷ்வர் குமார் புதிய சாதனைப் படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அபாரமாக பந்துவீசி வரும் அவர், நடப்பு ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது இந்தச் சாதனையை எட்டினார்.

போட்டியில் தனது 17-வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் தொடர் ஒன்றில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமியின் சாதனையை அவர் சமன் செய்தார். ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஷமி பவர்பிளேவில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். புவனேஷ்வர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் நான்காவது ஓவரின் நான்காவது பந்தில் சாய் சுதர்சனை வீழ்த்தி இந்த மைல்கல்லை எட்டினார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ககிசோ ரபாடா தன்வசப்படுத்தியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரபாடா, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

IPL 2026 Final: ஆர்சிபிக்கு ஆரம்பமே வெற்றி.. குஜராத் கேப்டன் சுப்மன் கில் காலி.. சோலி முடிஞ்சிது?

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் புவனேஷ்வர் குமார் இதுவரை 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பர்பிள் கேப் பட்டியலில் ரபாடாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தால் ரபாடாவின் 28 விக்கெட்டுகளை சமன் செய்வார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

IPL 2026: 700 ரன்கள் மேல் அடித்து என்ன யூஸ்.. பைனலில் காலை வாரிய சாய் சுதர்சன்.. குஜராத் அம்பேல்

இந்த சீசனில் புவனேஷ்வர் பர்பிள் கேப் வென்றிருந்தால்,, ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை இந்தப் பெருமையைப் பெறும் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2016-ல் 23 விக்கெட்டுகளையும், 2017-ல் 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பர்பிள் கேப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net