← முகப்பு செய்திகள்

IPL 2026 Awards List: Vaibhav Suryavanshi Dominates with Orange Cap and Multiple

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 53 பார்வைகள்
IPL 2026 Awards List: Vaibhav Suryavanshi Dominates with Orange Cap and Multiple

அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, இந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி விருதுகளை வாரிக் குவித்து அசத்தினார்.

இந்த சீசனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படும் வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்த விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். அவர் வென்ற விருதுகளின் விவரம்:

ஆரஞ்சு தொப்பி: இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர்: இந்த சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரராக (Emerging Player) அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சூப்பர் ஸ்டிரைக்கர்: சீசனின் மிகச்சிறந்த ஸ்டிரைக் ரேட் கொண்ட அதிரடி ஆட்டக்காரருக்கான சூப்பர் ஸ்டிரைக்கர் விருது இவருக்குக் கிடைத்தது. 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ஆடி இருந்தார் வைபவ்.

சூப்பர் சிக்ஸஸ்: இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரருக்கான சூப்பர் சிக்ஸஸ் விருதையும் வைபவ் தட்டிச் சென்றார். மொத்தம் 72 சிக்ஸ் விளாசி ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் விளாசிய வீரர் என்ற சாதனையையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2026 Awards List Vaibhav Suryavanshi Dominates with Orange Cap and Multiple Honors

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, இந்த சீசனில் சிறப்பாகப் பந்துவீசி 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்காக அவருக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான 'ஊதா தொப்பி' வழங்கப்பட்டது.

குஜராத் அணியின் முகமது சிராஜ் இந்த சீசனில் எதிரணி பேட்டர்களுக்கு ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். இந்த சீசனில் அதிகபட்சமாக 172 டாட் பந்துகளை வீசியதற்காக சிராஜுக்குத் தனி விருது வழங்கப்பட்டது. அதேபோல், குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் அதிகபட்சமாக 75 பவுண்டரிகளை விளாசியதற்காக சிறப்பு விருது பெற்றார்.

சிறந்த கேட்ச்: மனிஷ் பாண்டே பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் பறந்து வந்து டிம் டேவிட்டின் விக்கெட்டை வீழ்த்திய கேட்ச், இந்த சீசனின் சிறந்த கேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.

ஃபேர் பிளே விருது: மைதானத்தில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடிய அணிக்கான ஃபேர் பிளே விருது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

IPL Final: ஐஸ் கட்டிகளை கொட்டிட்டாங்க.. 2 கோப்பை வென்று கொடுத்த ஆண்டி பிளவருக்கு ஆர்சிபி சர்ப்ரைஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தாலும், தனிநபர் விருதுகளில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஆதிக்கம் செலுத்தியது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net