← முகப்பு செய்திகள்

Ind a vs sl A Tri-Series In Dambulla- Vaibhav sooryavanshi Playing today

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
Ind a vs sl A Tri-Series In Dambulla- Vaibhav sooryavanshi Playing today

இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்கும் விறுவிறுப்பான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஜூன் 9ஆம் தேதி இன்று தம்புலாவில் தொடங்குகிறது. இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில், திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி, பலம் வாய்ந்த இலங்கை ஏ அணியை எதிர்கொள்கிறது.

இத்தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மீது உள்ளது. தனது துணிச்சலான மற்றும் அதிரடியான பேட்டிங் பாணியால் கவனத்தை ஈர்த்த அவர், சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இதனால், களத்தில் அவரது தனித்துவமான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியா ஏ அணியை திலக் வர்மா வழிநடத்துகிறார். அணியில் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆரியா, அர்ஷத் கான் போன்ற ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்த நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருப்பது அணியின் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலந்த இந்த இந்திய அணி, தொடக்கப் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் வலுவான தொடக்கத்தைப் பெற முனைப்புடன் உள்ளது.

ஹர்சித் ராணாவை எப்படி சேர்த்தீங்க? ஷமி, கோலி, ரோகித்துக்கு மட்டும் வேறு நியாயமா?- தமிழக வீரர் கேள்வி

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடக்க ஆட்டம், ஜூன் 9, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக, காலை 9:30 மணிக்கு டாஸ் வீசப்படும். ஆட்டம் நடைபெறும் ரங்கிரி தம்புலா சர்வதேச மைதானம், ஒரு விறுவிறுப்பான போட்டிக்குத் தயாராகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் நேரலையாகக் காண சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல், ஆன்லைனில் போட்டியைத் தடையின்றிப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள், சோனி லிவ் (SonyLIV) தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

இந்தியா ஏ அணியின் வீரர்கள் பட்டியல்: திலக் வர்மா (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ருதுராஜ் கெய்க்வாட், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆரியா, நிஷாந்த் சிந்து, அனுகுல் ராய், அன்சுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங் சரக், அர்ஷத் கான், விப்ராஜ் நிகாம், குமார் குஷாக்ரா, ஆயுஷ் பதோனி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

IND vs AFG: முதல் டெஸ்டில் இந்திய அணி படைத்த 5 மாபெரும் சாதனைகள்

இலங்கை ஏ அணியின் வீரர்கள் பட்டியல்: சஹான் ஆராச்சிகே (கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ரவிந்து பெர்னாண்டோ, வானுஜா சஹான், சமிக கருணாரத்னே, விஜயகாந்து வியாஸ்காந்த், முகமது சிராஸ், அஹான் விக்கிரமசிங்கே, சமிக குணசேகரா, கருகா சங்கீத், விசென் ஹலம்பகே, குகதாஸ் மதுலன் மற்றும் துலாஜ் சமுதிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net