← முகப்பு செய்திகள்

Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri

டம்புல்லா: முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியைத் தோற்கடித்துத் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இலக்கை நோக்கி துரத்திய இலங்கை அணி வெற்றியை நெருங்கிய நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு ஆட்டத்தையே மாற்றியமைத்தனர்.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணிக்குத் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அறிமுக வீரரான வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்களில் ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி கடும் நெருக்கடிக்குள்ளானது.

இந்த இக்கட்டான சூழலில், கேப்டன் திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் அணியைச் சரிவிலிருந்து மீட்டார். இருவரும் நிதானமாக விளையாடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 101 ரன்கள் குவிக்க, திலக் வர்மா 60 ரன்கள் எடுத்து அணியைப் பலப்படுத்தினார்.

ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ஷாட் ஆடுகிறார்.. ஃபில்டர் நிற்கும் போது அங்கு அடிக்கலாமா- அஸ்வின்

இறுதிக் கட்டத்தில் ஆயுஷ் பதோனி (24) மற்றும் சூர்யாங் ஷேத் (26*) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர். இதன் பலனாக, இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைப் பதிவு செய்தது. இலங்கை ஏ அணியின் பந்துவீச்சில் முகமது ஷிராஸ் சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

278 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை ஏ அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா (47) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ (45) வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நடுத்தர ஓவர்களில் கேப்டன் சகான் ஆராச்சி (74) பொறுப்புடன் நின்று விளையாடி இலங்கையை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். இடையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தனர்.

IND vs AFG: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அபிஷேக் நாயர் கணிப்பு

ஆட்டம் முழுக்க இலங்கை அணியின் பக்கம் சாதகமாகவே இருந்தது. ஆனால், கடைசி நிமிடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். அனுகுல் ராய் மற்றும் பதோனி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அர்ஷத் கான் கடைசி ஓவரில் அசத்தலாகப் பந்துவீசி விக்கெட்டுகளைச் சரித்தார். 10 பந்துகளில் இலங்கை தனது கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
09 Jun 2026
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
09 Jun 2026
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை
27 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net