← முகப்பு செய்திகள்

Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia

டாக்கா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் டக்வொர்த்-லீவிஸ் முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி டக்வொர்த்-லீவிஸ் (DLS) முறைப்படி 86 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், வங்கதேசத்தின் ஆல்-ரவுண்டர் மொசாடெக் ஹொசைனின் அதிரடி ஆட்டமும், பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலும் வெற்றிக்கு வித்திட்டன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய தன்சித் ஹசன் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வங்கதேசத்திற்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ நிதானமாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார்.நடுவரிசையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், மொசாடெக் ஹொசைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது.

IND vs AFG: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அபிஷேக் நாயர் கணிப்பு

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் லியாம் ஸ்காட் மற்றும் மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.285 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மேத்யூ ஷார்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுசேன் (1) மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் (19) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அலெக்ஸ் கேரி (47) மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி அணியை மீட்கப் போராடியது. கேமரூன் கிரீன் அரைசதம் கடந்து 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இருப்பினும், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானாவின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. 42.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தபோது, மின்னல் மற்றும் பலத்த மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நீண்ட நேரம் மழை நீடித்ததால், டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச தரப்பில் நஹித் ரானா 3 விக்கெட்டுகளையும், மொசாடெக் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக மொசாடெக் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 11-ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் வங்கதேசத்தின் இந்த வெற்றி அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND A vs SL A: ருதுராஜ் அபார சதம்.. தோல்வி விளிம்பில் இருந்த இந்தியா ஏ திரில் வெற்றி

இந்த வெற்றி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் வங்கதேசம் முதல் முறையாக வீழ்த்தியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு கார்டிஃப் நகரில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை முதன்முறையாக வங்கதேசம் வீழ்த்தியிருந்தது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
09 Jun 2026
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
09 Jun 2026
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை
32 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net