யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.  யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சி பட்டறையில் இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் சூம் செயலி ஊடாகவும் , இருவர் நேரடியாகவும் வளவளராக கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வினை இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஆரம்பித்து வைத்தார்.பயிற்சி பட்டறையின் முடிவில் , கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.