வியட்நாமில் சுற்றுலாப் படகு ஒன்று  கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில்  38 போ் உயிாிழந்துள்ளதுடன்   பலா்  காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் . 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும்     தொிவிக்கப்பட்டள்ளது.

வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில்  ஒன்றான ஹலாங் பே  விரிகுடா பகுதியில், நேற்று சனிக்கிழமை (19)  53 பேருடன்  சென்ற சுற்றுலா படகு ஒன்று  திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.   இந்த நிலையில்  38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும்  அதில்  8 பேர் குழந்தைகள் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணாமல்  போனவா்களை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது