ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையின் சில பகுதிகளை வெட்டி ஒன்றாக்கி ஒளிபரப்பியது. இச்செயல் னாதிபதி டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஊழலின் விளைவு பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவி விலக வழிவகுத்தது.தற்போது இந்த நடவடிக்கைக்கு பிபிசி அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது. ஆனால் அவரால் கோரப்படும் இழப்பீட்டுக் கோரிக்கையை பிபிசி மறுத்துள்ளது.பிபிசி நிறுவனம் தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்டு, அவருக்கு இழப்பீடு வழங்காவிட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் பிபிசி மீது 1 பில்லியன் டாலர் (£759 மில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்போவதாகக் கூறினார்.ஜனவரி 6, 2021 அன்று ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்ற திருத்தத்திற்கு அவரும் நிறுவனமும் வருந்துவதாக ஜனாதிபதி டிரம்பிற்கு தெளிவுபடுத்தும் வகையில் பிபிசி தலைவர் சமீர் ஷா வெள்ளை மாளிகைக்கு தனித்தனியாக ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் வழக்கறிஞர்களிடமிருந்து பிபிசிக்கு இந்தக் கடிதம் கிடைத்தது. ஆவணப்படத்தை முழுமையான மற்றும் நியாயமான முறையில் திரும்பப் பெற வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பிபிசி ஏற்பட்ட தீங்கிற்கு ஜனாதிபதி டிரம்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அது கோருகிறது.வெள்ளிக்கிழமை 22:00 GMT (17:00 EST)க்குள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்திருந்தது.டிரம்பின் சட்டக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், பிபிசி பதிலளிக்க வேண்டிய வழக்கு இல்லை என்று நினைப்பதற்கான ஐந்து முக்கிய வாதங்களை முன்வைக்கிறது.முதலாவதாக, பிபிசிக்கு அதன் அமெரிக்க சேனல்களில் பனோரமா எபிசோடை விநியோகிக்கும் உரிமை இல்லை என்றும், அதை விநியோகிக்கவும் இல்லை என்றும் அது கூறுகிறது.இந்த ஆவணப்படம் பிபிசி ஐபிளேயரில் கிடைத்தபோது, அது புவியியல் ரீதியாக இங்கிலாந்தில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டது.இரண்டாவதாக, டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்த ஆவணப்படம் அவருக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை என்று அது கூறுகிறது.மூன்றாவதாக, அந்த வீடியோ கிளிப் தவறாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை, மாறாக ஒரு நீண்ட உரையைச் சுருக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்தத் திருத்தம் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும் அது கூறுகிறது.நான்காவதாக, அந்த வீடியோ கிளிப்பை ஒருபோதும் தனியாகப் பார்க்க விரும்பவில்லை என்று அது கூறுகிறது. மாறாக, அது ஒரு மணி நேர நிகழ்ச்சி நிரலுக்குள் 12 வினாடிகள் கொண்டது, அதில் டிரம்பிற்கு ஆதரவாக ஏராளமான குரல்களும் இருந்தன.ஐந்தாவதாக பொது அக்கறை மற்றும் அரசியல் பேச்சு தொடர்பான ஒரு விடயத்தில் ஒரு கருத்து அமெரிக்காவில் அவதூறு சட்டங்களின் கீழ் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது என்ற ஐந்து விடயங்களை முன்வைத்ததுள்ளது.
டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது பிபிசி: இழப்பீடு வழங்க மறுக்கிறது!
6