மீண்டும் காணிபிடிக்கும் நிமல்சிறிபால!

by ilankai

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு வவுனியா வடக்கில் 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவிததுள்ளார்;.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம் (09)கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.அதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக அதனை அவதானித்தேன்.அதனை ஏன் அரச திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கம் என்ன செய்கின்றதெனவும் து.ரவிகரன் கேள்விஎழுப்பியிருந்தார்.மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை அவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள்.வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமால் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

Related Posts