காணாமல் போனது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டா பாம்பு

காணாமல் போனது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டா பாம்பு

by ilankai

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனகொண்டா பாம்பு காணால் போயுள்ளதாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவின்  துணைப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர  தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மிருகக்காட்சிசாலையின் ஊர்வன தோட்டத்தில் கண்ணாடியால் மூடப்பட்ட கூண்டில் வைக்கப்பட்டிருந்த இளம் அனகொண்டா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காணாமல் போனதாக துணை இயக்குநர் குறிப்பிட்டார்.அனகொண்டாவைக் கண்டுபிடிக்க காவல்துறையினரும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களின் குழுவும் விசாரணைகளைத் தொடங்கினர்.மஞ்சள் அனகோண்டா என்று அழைக்கப்படும் அந்த இளம் பாம்பு யாரோ திருடிச் சென்றார்களா? அல்லது கண்ணாடி கூண்டில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக வெளியேறியதா? என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று ஹேமந்த சமரசேகர கூறினார்.மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் ஊர்வன தோட்டத்திற்குள் தனிமைப்படுத்தலில் வைத்திருந்தபோது அனகொண்டா காணாமல் போனது.

Related Posts