கள்ளியடி பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரண பணியை முன் னெடுத்த மெசிடோ. – Global Tamil News

by ilankai

கள்ளியடி பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து முதல் கட்ட நிவாரண பணியை முன் னெடுத்த மெசிடோ. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை,புயல் காரணமாக பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட கூராய் பகுதி மக்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் உள்ள கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவல் குறித்த மக்கள் தங்கியுள்ள பாடசாலையில் இருந்து தேவையான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மக்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான    நிறுவனத்தின்(மெசிடோ)  தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர்  நேற்றைய தினம் திங்கட்கிழமை (1.12.25) குறித்த பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு,அவர்களுக்கு தேவையான முதல் கட்ட நிவாரண பணியை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக குடிநீர்,ஆண்கள்,பெண்களுக்கான ஆடைகள் உள்ளடங்களாக நிவாரண பொருட்களை முதல் கட்டமாக வழங்கி வைத்துள்ளனர். கூராய் பகுதி மக்கள் பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து வெளி வர முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் கடற் படையினரின் உதவியுடன் குறித்த மக்கள் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts