யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன. 11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர்  நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

Related Posts