யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து வர்த்தகர்கள் சிலர் பதுக்களில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது,  கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் கண்டறியப்பட்டு , கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் தொடர்பாகவும் , பதுக்கல் நடவடிக்கைகளில் வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைப்பதனால், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலர்  தெரிவித்தார்.

Related Posts