மல்வத்து ஓயாவில் குதித்த  தாயும் இரண்டு குழந்தைகளும் – Global Tamil News

மல்வத்து ஓயாவில் குதித்த  தாயும் இரண்டு குழந்தைகளும் – Global Tamil News

by ilankai

  உயிரை மாய்த்துக்கொள்வதற்காக    மல்வத்து ஓயாவில்  ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் குதித்துள்ள நிலையில்  உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்டுள்ளாா்.  இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் ஒருவரே  தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன்  இன்று  செவ்வாய்க்கிழமை (02) காலை  அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனா் குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.   மலத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அனுராதபுரம்  காவல் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு  இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts