தமிழரசுக்கு முதுகெலும்பு உண்டா?

by ilankai

இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் நடுநிலமை வகிப்பதென்பது முதுகெலும்பற்ற செயல் என்ற எம்.ஏ.சுமந்திரனின் விமர்சனங்கள் மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் வாக்களிப்பில் பங்கெடுக்காது நடுநிலமை வகிக்க தமிழரசுக்கட்சி முடிவு செய்துள்ளது.இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது இலங்கை தமிழ் அரசுக் கட்சி விலகியிருந்தது.முன்னதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என கட்சி முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படடிருந்தது.இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.

Related Posts