1
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடை பயணத்தில் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.