டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ புகையிரத நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10ம் திகதி டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ புகையிரத நிலையம் அருகே, கார் ஒன்று வெடித்து சிதறிய நிலையில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்ததுடன் 13 பேர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காரை செலுத்தியவர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் முகமது உமர் நபி என தெரியவந்துள்ளதுடன் இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடு இடிக்கப்பட்டது! – Global Tamil News
2