இஸ்ரேலில் இலங்கையா் ஒருவா் கொலை – Global Tamil News

by ilankai

இஸ்ரேலில் நேற்றிரவு இலங்கையா்  ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.   டெல் அவிவ் நகரின் கடற்கரைப் பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள இலங்கைக்கான  தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.  கொல்லப்பட்டவா் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர்   கட்டுமானத் துறையில் வேலைக்காக இஸ்ரேலுக்கு  சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக, அவர்  கொல்லப்பட்டுள்ளதாக  இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தொிவித்துள்ளாா்.  மேலும் சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல்  காவல்துறையினா்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Related Posts