போதைப்பொருள் கடத்தலில் முப்படைகள்!

by ilankai

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டுள்ளதாக தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அனுர அரசு அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது.போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டு காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.வடக்கு கல்வி வீழ்ச்சிக்கு போதைப்பொருள் மாhப்பியாக்கள் காரணம் என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ; வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் , அவர்களை எப்போது வெளியேற்ற போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதில் வழங்கிய கடற்றொழில் அமைச்சர், வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் கடந்த காலங்களில் காவல்துறையும், இராணுவமும் இணைந்து தொடர்புபட்டுள்ளனர். அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.அதற்கு பின்னால் போதைப்பொருள் மாப்பியாக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பங்காளிக்கட்சிகளது; தலையீடுகளும், இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts