ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது! – Global Tamil News

by ilankai

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று ( 11.11.25) சுன்னாகம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Spread the love  ஆவா குழுவின் தலைவர்இலங்கைகைதுசுன்னாகம் காவற்துறையாழ்ப்பாணம்வினோத்

Related Posts