யாழில். போதைப்பொருளுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

யாழில். போதைப்பொருளுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

by ilankai

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர் ஒருவரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக பொலிஸ் தடுப்பு காவலில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரி இருந்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்று அனுமதி வழங்கிய நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமையுடன் , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதி வழங்கிய காலக்கெடு நிறைவடைய இருந்த நிலையில் , சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் அழைத்து சென்றனர். அந்நிலையில் சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts