இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தீர்மானத்தின் ஊடாக தமிழ்ச்சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அயர்லாந்து நாட்டுக்குரிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்நமாரா வலியுறுத்தியுள்ளார்.அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையைக் காலநீடிப்பு செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடனான சந்திப்பின்போது இதுபற்றிக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்நமாரா, தமிழர் பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.அதனையடுத்து இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தீர்மானத்தின் ஊடாக முன்னேற்றங்கள் அடையப்பட்டாலும், அதனூடாக தமிழ்ச்சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.Michael McNamara
தமிழர்களின் பாதுகாப்பு, நீதியை உறுதிப்படுத்துவது அவசியம் – மைக்கேல் மெக்நமாரா
5