மன்னார் ஊடகவியலாளர் நடராசா ஜெயகாந்தனுக்கு எதிராக மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் இனால் கடந்த மாதம் 31-ம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சில வாரங்களுக்கு முன் ரெலோ உறுப்பினரான சுரேஷ் எனப்படுகின்ற நபர் நீர் கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.அது தொடர்பில் ஊடகவியலாளர் ஜெயகாந்தன் செய்தி ஒன்றினை வெளியிட்ட போது ரெலோ கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் சுரேஷ் எனப்படுகின்ற சடலமாக மீட்கப்பட்ட நபரும் ஒரு பெண்ணை மையப்படுத்தி தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் பேசிய ஓடியோ வெளியாகியிருந்தது என்பதையும் சுட்டிக்கட்டியிருந்தார்.இந்த நிலையில்தான் குறிப்பிட்ட ஊடகவியலாளர் செல்வம் அடைக்கலநாதனை ரெலோவின் தலைவர் அடைக்கலநாதன் என குறிப்பிட்டது தவறு எனவும் ரெலோவின் தலைவர் என்று குறிப்பிடுவது கட்சி சார்ந்த விடயம் எனவும் மன்னார் நகர முதல்வர் முறைப்பாடு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டிற்கமைய ஜெயகாந்தனை பொலிசார் இன்று (02) காலை விசாரணைக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்திருந்தனர்.அதற்கமைய ஊடகவியலாளர் ஜெயகாந்தன் இன்று (02) காலை மன்னார் பொலிஸ் நிலையம் சென்றிருந்தார், மன்னார் நகர முதல்வரும் அந்த சந்தர்ப்பத்தில் பொலிசாரால் அழைக்கப்பட்டிருந்தார்.முறைப்பாடு தொடர்பில் விசாரணை இடம்பெற்ற நிலையில், வெளியான செய்தி காணொளி தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வு துறைக்கு (CID) மாற்ற பொலிசார் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செல்வத்தை துரத்தும் துன்பியல்?
11
previous post