சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரங்களை கைப்பற்றிய காவல்துறை – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்ட விரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அரியாலை பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் வந்த கும்பல் ஒன்று சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்   சம்பவ இடத்திற்கு காவல்துறைக் குழு விரைந்த போது , காவல்துறையினரை கண்டதும் , மண் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியுள்ளது. அதனை அடுத்து , மணலுடன் உழவு இயந்திரங்களை மீட்ட காவல்துறையினர்   மணல் அகழ பயன்படுத்திய சவல் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.  தப்பி சென்றவர்களை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  காவல்துறையினர்   தெரிவித்துள்ளனர்

Related Posts