யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

by ilankai

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார் மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர். அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி சோதனை செய்த வேளை, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.அதனை அடுத்து , சாரதியை கைது செய்த பொலிஸார் , டிப்பர் வாகனத்தையும் மணலுடன் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Related Posts