பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் பேட்டிங் செய்தார் எழுதியவர், மனோஜ் சதுர்வேதி பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்படவில்லை.

இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால், அவர் திறமையான ஆட்டத்தால் கவனம் ஈர்க்க தவறிவிட்டார்.

எனவே, மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது இந்திய அணிக்கு ஒரு கவலையாக மாறியுள்ளது.

கருண் நாயர் நன்றாக தொடங்கினாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற அவர் தவறவிடுவதுதான் பிரச்னையாக உள்ளது.

வேகமாக நகரும் பந்துகளை விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் ஆட்டமிழந்துள்ளார். எளிதில் தீர்வு கிடைக்காத பிரச்னை இது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கருண் நாயர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்சரை கருண் நாயர் தடுக்கும்போது வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்ட கருண் நாயர்

உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்தார், அதனால் மூன்றாம் வரிசை வீரராக களமிறங்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்தவொரு இன்னிங்ஸையும் வலுப்படுத்த இது மிகவும் முக்கியம். ஆனால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவதில் கருண் நாயர் தோல்வியடைந்தது, இந்தியாவின் ஆட்டத்தை பாதித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் கருண் நாயர் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 21.83 எனும் சராசரியில் வெறும் 131 ரன்களையே பெற்றுள்ளார்.

இதில் லார்ட்ஸில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற 40 ரன்கள்தான் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோராகும்.

கருண் நாயர் நான்காவது டெஸ்டில் அதாவது மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், அவரது டெஸ்ட் வாழ்க்கை மீண்டும் முடிவுக்கு வரக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உதவி பயிற்சியாளர் ரியான் டென்உதவி பயிற்சியாளர் ரியான் என்ன நினைக்கிறார்?

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோசெட், பெக்கென்ஹேமில் நடைபெற்ற பயிற்சியின்போது, இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் தெளிவாக தெரிவிக்கவில்லை.

அவர் கூறுகையில், “கருண் நாயர் நல்ல வேகத்துடன் செயல்படுகிறார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து எங்களுக்கு நிறைய ரன்கள் தேவை. நாங்கள் எதில் சிறப்பாக இருக்கிறோம் என்பதிலும் போட்டியில் தோல்வியடைந்ததற்கான தவறுகளை சரிசெய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.” என அவர் கூறினார்.

“ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் தனித்தனியாக பார்த்தால், அவர்கள் நன்றாகவே விளையாடியுள்ளனர். விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் அணியின் பிரச்னை.” என கூறினார் ரியான்

சில சந்தர்ப்பங்களில் கருண் நாயருடையது மட்டுமல்லாமல் அனைத்து பேட்ஸ்மேன்களுடைய ஆட்டமும் சரிவை கண்டதாக, அணி நிர்வாகம் நம்புகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் ஃபரூக் இன்ஜினியர் கருண் நாயரின் ஆட்டத்தில் திருப்தி அடையவில்லை.இந்திய முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரர் ஃபரூக் இஞ்சினியரும் கருண் நாயரின் ஆட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “கருண் நாயர் முதல் 20-30 ரன்களை நன்றாக விளையாடுகிறார். கவர் டிரைவ் (cover drives) ஷாட்டுகளை நன்றாக அடிக்கிறார். ஆனால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து இது மட்டும் எதிர்பார்க்கப்படுவதில்லை. மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் நிறைய ரன்களை குவிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா இந்த தொடரை ஒளிபரப்பும் டிவி சேனலின் கமெண்ட்ரியில், “கருண் நாயரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அணி நிர்வாகம் கருண் நாயரை தக்கவைக்க விரும்பினால், இந்த தொடர் முடிந்ததும் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.” என கூறினார்

“அணி நிர்வாகம் வருங்கால திட்டங்களில் சாய் சுதர்ஷனை மனதில் வைத்திருந்தால், ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கும் போட்டியிலிருந்தே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சாய் சுதர்ஷன் வந்தவுடன் தனது விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என நமக்கு தெரியும். ஆனால், அவர் விளையாடுவது போதாது, அவர் இந்த நிலையில் விளையாடினால் 60-70 ஓவர்கள் பந்து வீசக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவாங் காந்தி தான் 2016ம் ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் அணியில் கருண் நாயரை தேர்ந்தெடுத்தார். இந்த சுற்றுப்பயணம் கருணுக்கு கொடூரமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய அணியிடம் உள்ள வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்ஷனுக்கு (பேட்டிங்) வாய்ப்பு கிடைக்கக்கூடும். (கோப்புப் படம்)மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இல்லை என்றால், இந்திய அணிக்கு முன் உள்ள மற்ற வாய்ப்புகள் என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவது முதல் வாய்ப்பு.

முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷன், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இரண்டாவது இன்னிங்ஸ்லில் 30 ரன்களை எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் தனது ஆட்ட பாணியால் கவனம் ஈர்த்தார்.

ஆனால் இரண்டாவது டெஸ்டில், ஆல்ரவுண்டரை களமிறக்கும் பொருட்டு சாய் சுதர்ஷன் களமிறக்கப்படவில்லை.

முதலாவது டெஸ்டில் சாய் மூன்றாவதாகவும் கருண் நாயர் ஆறாவதாகவும் களமிறக்கப்பட்டனர். இதன்மூலம், மூன்றாவது வரிசை வீரருக்கு சாய் சுதர்ஷன் தான் பயிற்சியாளரின் கண்களுக்கு முதல் தேர்வாக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் பேட்டிங் செய்தாலும், விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

துருவ் ஜுரெல் விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். தற்போது ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவர் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டியிருக்கும், துருவ் ஜுரெல் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் ஜுரெல் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் திறன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து டெஸ்ட் அணியில் அவர் உள்ளார். ஆனால், இன்னும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்த தொடருக்கு முன்பு அவர் இந்தியாவுக்காக நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் அரைசதம் அடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.கருண் நாயரை போன்றே ஷ்ரேயாஸும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை குவித்துள்ளார், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது.

அவர் ஃபார்மில் இருந்தபோதிலும் டெஸ்ட் அணியில் அவரைத் தேர்வு செய்யாதது, வீரர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அணியில் இருந்திருந்தால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.

ஷ்ரேயாஸ் அணியில் இல்லாவிட்டாலும், தேவைப்பட்டால் அவர் அழைக்கப்படலாம்.

14 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. அவர், 35க்கும் அதிகமான சராசரியுடன் 811 ரன்கள் எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபியில் மிகவும் திறமையாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அணிக்கு வந்தால் அது அணியை வலுப்படுத்தும் என்பது உறுதி.

ஆனால் தேர்வாளர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இப்போது அவர் மீது மேலும் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு