ஜிம்கானாவை உதறிவிட்டு புதிய கிளப் உலகுக்கு இந்திய செல்வந்தர்கள் நகர்வது ஏன்?

பட மூலாதாரம், Soho House

படக்குறிப்பு, இந்தியா புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கிக்கொண்டிருக்க, உறுப்பினர்களுக்கு மட்டுமான தனியார் கிளப்பின் நவீன அவதாரம் உருவாகியுள்ளதுஎழுதியவர், நிகில் இனாம்தார்பதவி, பிபிசி நியூஸ், லண்டன்52 நிமிடங்களுக்கு முன்னர்

பல தசாப்தங்களாக இந்தியாவின் மேல்தட்டு வர்க்த்தினர், நாட்டின் பெரிய நகரங்களில் பகட்டான பகுதிகளிலும், மலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் கேண்டோன்மெண்ட் நகரங்களிலும் பரவி கிடக்கும் பிரிட்டீஷ் காலத்து தனியார் கிளப்புகள் மற்றும் ஜிம்கானாக்களில் தஞ்சமடைந்து வந்தனர்.

பெல்பாய்கள், பட்லர்கள், அடர் மஹோகனி மரவேலைப்பாடுகளால் உருவான உட்புறங்கள் மற்றும் தளர்வுகள் இல்லாத ஆடைக் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் இந்த பிரிட்டிஷ் பாணியிலான இடங்களுக்குள் வசதியும் செல்வாக்கும் உள்ளவர்கள் – அதிகார வட்டத்தில் உலவும் பாரம்பரிய பணக்காரர்கள், பெரு முதலாளிகள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் அல்லது முப்படைகளின் அதிகாரிகள் – மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர்களும் அதிகாரம் மிக்கவர்களும் சந்தித்து பேசிக் கொண்டது இங்குதான். சுருட்டு புகைத்து அல்லது ஸ்குவாஷ் விளையாடி சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டதும், கோல்ஃப் விளையாடும்போது வணிக ஒப்பந்தங்களை இறுதி செய்ததும் இங்குதான். ஆனால் காலனிய கடந்த காலத்தை உதறவிரும்பும் நாட்டில், இவை காலத்திற்கு ஒவ்வாத கடந்தகால எச்சங்களாக தோன்றுகின்றன.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா புதிய தலைமுறை செல்வந்தர்களை உருவாக்கிவரும் நிலையில், பல புதிய தனியார் கிளப்கள் உருவாகிவருகின்றன. இந்த நவீன, அதிக கட்டுப்பாடுகள் இல்லாத கிளப்கள், இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

இங்குதான் புதிதாக செல்வந்தர்களாக மாறியவர்கள் சந்தித்துக்கொள்வதுடன், வணிகத்தையும் செய்கின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டீஷ் காலத்து தனியார் கிளப்புகள் மற்றும் ஜிம்கானாக்கள் இந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்களின் ஆடுகளங்களாக பல பத்தாண்டுகளாக இருந்து வந்துள்ளனஇத்தகைய இடங்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளதால் சர்வதேச சங்கிலியான சோஹோ ஹவுஸ், வரவிருக்கும் மாதங்களில் தலைநகர் டெல்லி மற்றும் மும்பையின் தெற்கு பகுதியில் இரண்டு புதிய கிளப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

மும்பையின் புகழ்பெற்ற ஜுஹு கடற்கரையில் கடலை பார்க்கும் வகையில் உள்ள அவர்களின் முதல் கிளப் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சங்கிலி, இந்தியாவில் வளர்ந்து வரும் சந்தையை பூர்த்தி செய்ய போட்டி போடும் புதிய கிளப்புகளில் ஒன்றுதான்.

சோஹோ ஹவுஸ் 1990களின் நடுப்பகுதியில் லண்டனில், பால் மால் பகுதியில் இருந்த உயர்நிலை கனவான்களுக்கான கிளப்புகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது. இது முற்றிலும் புதிய ஒரு கருத்தாக்கமாக இருந்தது. பழைய உயர்குடி இடங்களில் ஒட்டமுடியாமல் இருந்த படைப்பாளிகள், சிந்தைனையாளர்கள், மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு தளர்வான கிளப்பாக அது இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பத்தால் வளர்ச்சி காணும் ஸ்டார்ட் அப் மற்றும் படைப்பாளிகளை கொண்ட பொருளாதாரம் பல புதிய செல்வந்தர்களை உருவாக்கியிருப்பது, சோஹோ ஹவுஸுக்கு அதே போன்ற மற்றொரு சந்தை வாய்ப்பை அளித்துள்ளது.

“இந்தியாவின் இளம் செல்வத்தில் வளர்ச்சி உள்ளது, இளம் தொழில்முனைவோர்களுக்கு தங்களை முன்னிறுத்த ஒரு தளம் தேவைப்படுகிறது,” என்று சோஹோ ஹவுஸின் ஆசிய பிராந்திய இயக்குநர் கெல்லி வார்டிங்ஹாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

“புதிய செல்வந்தர்களுக்கு பாரம்பரிய ஜிம்கானாக்கள் வழங்குவதிலிருந்து வேறுபட்ட அம்சங்கள் தேவை.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பணக்காரர்களும், அதிகாரம் மிக்கவர்களும் நட்பு பாராட்டவும், தொழில் செய்யவும் பல ஆண்டுகளாக பழைய காலனிய கிளப்புகளில் சந்தித்து வந்துள்ளனர்பழைய கிளப்புகளைப் போலல்லாமல், குடும்ப பாரம்பரியம், நிலை, செல்வம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் சோஹோ ஹவுஸ் யாரையும் “தடை” செய்யவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

இதன் உறுப்பினர்கள் மும்பையின் பரபரப்பான சூழலில் இருந்து தப்பிக்க, மொட்டை மாடி நீச்சல்குளம், உடற்பயிற்சிகூடம், தனிப்பட்ட திரையரங்கு மற்றும் பலவிதமான உணவுகள் உள்ள இந்த இடத்தை ஒரு புகலிடமாக பயன்படுத்துகின்றனர், அதுமட்டுமல்லாமல், ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட சமூகத்திலிருந்து பலன்களை பெற்றுக்கொள்ளவும், புதிய திறன்களை கற்கவும், நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும் அதை பயன்படுத்துகின்றனர்.

இளம் திரைப்பட தயாரிப்பாளர் ரீமா மாயா, “எப்போதும் இடத்திற்காக முட்டிமோதிக்கொள்ளவேண்டிய, நெரிசல் மிக்க ஒரு கஃபேவில் அமைதியான மூலையில் இடத்திற்கு போராட வேண்டிய” நகரத்தில்- இந்த கிளப்பில் உறுப்பினராக இருப்பது, “பரம்பரை சலுகைகள்” இல்லாத தன்னை போன்ற ஒருவருக்கு மும்பை திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களுடன் அரிதான தொடர்பை அளித்துள்ளது என்று கூறுகிறார்.

உண்மையில், பல ஆண்டுகளாக, பாரம்பரிய ஜிம்கானாக்கள் படைப்பாளிகளுக்கு மூடப்பட்டிருந்தன. பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த ஃபெரோஸ் கான், ஒரு முறை மும்பையில் உள்ள ஒரு ஜிம்கானா கிளப்பில் உறுப்பினராக சேர கோரியபோது, அவர்கள் நடிகர்களை அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவர்களின் உயர்நிலை மனப்பான்மையால் அதிர்ச்சியடைந்த கான், “நீங்கள் என் திரைப்படங்களைப் பார்த்திருந்தால், நான் சொல்லிக்கொள்ளும்படியான நடிகன் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்,” என்று நகைச்சுவையாக கூறியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு நேர்மாறாக சோஹோ ஹவுஸ் , அதன் உறுப்பினரான பாலிவுட் நட்சத்திரம் அலி பஃசலை தனது பத்திரிகையின் அட்டைப்படத்தில் பெருமையுடன் வெளியிடுகிறது.

பட மூலாதாரம், Soho House

படக்குறிப்பு, மும்பையின் புகழ்பெற்ற ஜுஹு கடற்கரையில் கடலை பார்த்த வண்ணம் உள்ள சோஹோ ஹவுஸின் கிளப் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றுள்ளதுஆனால், நவீன, ஜனநாயக மனப்பான்மையைத் தாண்டி, இந்த கிளப்புகளுக்கு அதிக தேவை இருப்பதற்கு இன்னமும் மிகவும் விரும்பப்படும் பாரம்பரிய ஜிம்கானாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணம்.

இவற்றில் பெரும்பாலானவற்றில் காத்திருப்பு பட்டியல் “பல ஆண்டுகளாக” நீள்கின்றன, மேலும் “புதிதாக சுயமாக உருவான தொழிலதிபர்கள், படைப்பு மேதைகள் மற்றும் உயர்மட்ட கார்ப்பரேட் நிர்வாகிகளுக்கு” சேவையாற்ற போதுமான பாரம்பரிய கிளப்புகள் உருவாகவில்லை என்பது புதிய உறுப்பினர்களுக்கு மட்டுமான கிளப்புகள் பற்றிய ஆய்வு ஒன்றை அண்மையில் வெளியிட்ட ஆக்சன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அங்கித் கன்சலின் கூற்றாக உள்ளது.

இந்த முரண்பாடு, குவோரம் மற்றும் BVLD போன்ற தனியாக இயங்கும் கிளப்புகள் மற்றும் ஸ்டி ரெஜிஸ் மற்றும் ஃபோர் சீசன்ஸ் போன்ற உலகளாவிய விருந்தோம்பல் பிராண்டுகளின் பின்புலத்தில் இயங்கும் கிளப்புகள் உட்பட இரண்டு டஜனுக்கு மேற்பட்ட புதிய கிளப்கள் இந்தியாவில் திறப்பதற்கு வழிவகுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் குறைந்தது அரை டஜன் கிளப்புகள் வரவுள்ளன என்று ஆக்சன் டெவலப்பர்ஸ் கூறுகிறது.

இந்த சந்தை, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10% வளர்ந்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. செல்வந்தர்கள் பொது இடங்களை தவிர்க்க காரணமாக இருந்த கோவிட் இந்த சந்தைக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக மாறியது.

முற்போக்கான உறுப்பினர் கொள்கைகள் மற்றும் கலை, இலக்கியம் மற்றும் தனி இசைக்கு ஆதரவு போன்றவற்றால் இந்த இடங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் இருந்தாலும், இவை இன்னமும் நவீன ஆடம்பரத்தின் புகலிடமாகத்தான் இருக்கின்றன என ஆக்சன் டெவலபர்ஸ் கூறுகிறது.

அழைப்பு மூலமோ அல்லது பரிந்துரைகள் மூலமோ மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுடன் உறுப்பினர் கட்டணங்கள் பெரும்பாலான இந்தியர்களின் மாத வருமானத்தை விட பல மடங்கு அதிகம்.

உதாரணமாக சோஹோ ஹவுஸில் ஆண்டு உறுப்பினர் கட்டணம் 320,000 இந்திய ரூபாய்கள் ($3,700; $2,775) – இது பெரும்பாலான மக்களால் செலுத்த முடியாத அளவில் உள்ளது.

உறுப்பினர் சேர்க்கை குடும்ப பாரம்பரியத்தை அடிப்படையாக கொள்ளாமல் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் எதிர்கால திறனை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் மாற்றம். புதிதாக சுயமாக உருவான உயர்குடியினர், பழைய பரம்பரை வாரிசுகளின் இடத்தை பிடித்துள்ளனர் – ஆனால் சராசரி நடுத்தர வர்க்க இந்தியருக்கு இந்த கிளப்புகளில் நுழைவது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பிரதான வணிகப் பகுதிகள் தேவைகள் மந்தமடைந்து போராடிக்கொண்டிருக்கும் அதே நேரம் ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தை பெருகியுள்ளது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஒரு வகையில், கிளப் உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு, இந்தியா தனது சந்தையை உலகிற்கு திறந்து அதன சோசலிச அடித்தளங்களை கைவிட்டபின் ஏற்பட்ட நாட்டின் பரந்த பொருளாதார தாராளமயமாக்கல் வளர்ச்சி கதையை பிரதிபலிக்கிறது.

வளர்ச்சி வேகமெடுத்தது, ஆனால் பணக்காரர்கள்தான் அதன் மிகப்பெரிய பயனாளிகளாக மாறி, மேலும் பெரிய செல்வந்தர்களானதால், சமத்துவமின்மை விகிதம் அதிக அளவு உயர்ந்தது. இதனால்தான் பெரும்பாலான இந்தியர்கள் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செலவு செய்ய பணமில்லாமல் இருப்பதால் மந்தமான சந்தையுடன் வணிகர்கள் போராடிக்கொண்டிருந்தாலும், சொகுசுப் பொருட்களுக்கான சந்தை செழித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், புதிதாக உருவாகும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பெரிய வணிக வாய்ப்பை அளிக்கிறது.

இந்தியாவின் 797,000 உயர் செல்வ மதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும் – இது 1.4 பில்லியன் மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே, ஆனால் செல்வந்தர்கள் ஓய்வெடுக்கவும், தொடர்புகளை உருவாக்கவும், உயர்நிலை வாழ்க்கையை வாழவும் புதிய ஆடுகளங்களை உருவாக்குவோருக்கு எதிர்கால வளர்ச்சியை தூண்ட போதுமானது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு