← முகப்பு தமிழ்

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்ற

🕐 09 Jun 2026 📂 தமிழ் 6 பார்வைகள்

இந்த வெடிப்புச் சம்பவமானது, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த விபத்து ஈரான் படைகளின் தாக்குதலால் நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், இது குறித்து ஆய்வு அறிக்கை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பிற நாட்டு கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதால், அமெரிக்கப் படைகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விபத்தில், ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு
09 Jun 2026
📰
தமிழ்
தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சலே (சு
09 Jun 2026
📰
தமிழ்
நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த
09 Jun 2026
📰
தமிழ்
தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர்
09 Jun 2026
📰
தமிழ்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் க
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net