← முகப்பு தலையங்கம்

ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை அருகே வாகனம் ஒன்று கூட்டத்தினரின் மீது பாய்ந்ததில் மூன்று

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 24 பார்வைகள்
ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை அருகே வாகனம் ஒன்று கூட்டத்தினரின் மீது பாய்ந்ததில் மூன்று

ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை அருகே வாகனம் ஒன்று கூட்டத்தினரின் மீது பாய்ந்ததில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை ஒன்றின் அருகே கூட்டத்தினரின் மீது வாகனம் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீகொட சந்தி பகுதியில் உள்ள வெசாக் தானசாலை அருகே, வீதியில் சென்றுகொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற காரின் சாரதி, பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமாகமஅடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலை தரப்பு தகவல்களின்படி, அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் சென்ற நிலையில், இந்த கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
09 Jun 2026
தலையங்கம்
“எந்தவொரு முதலமைச்சராவது இவ்வளவு எளிமையாக இருப்பார்களா?” என்று கேட்டால், “நிச்சயமாக இருக்க மாட்டார்கள்” என்பது
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனியப் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 600
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்ததை அடுத்து, சோமாலியாவின் சிறந்த
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்க
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அதிமுக-வின் சீனியர் விக்கெட்டுகளான சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் ஏன் இன்னும் தவெக-வில் ஐக்கியமாகவில்லை என்பத
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net