← முகப்பு தலையங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன், சாள்ஸ் மே 18 அன்று

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 42 பார்வைகள்
விடுதலைப் புலிகளின் தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன், சாள்ஸ் மே 18 அன்று
பிரபாகரனின் மகன் வீரச்சாவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது – மாவீரர் பட்டியல்!

விடுதலைப் புலிகளின் தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன், சாள்ஸ் மே 18 அன்று உயிரிழந்தார் என, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) லண்டனில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மற்றும் மே 18 அன்று உயிரிழந்த மிக முக்கிய போராளிகளின் பட்டியல் ஒன்றையும் TCC தற்போது வெளியிட்டு, அவர்களை மாவீரர் பட்டியலில் இணைத்துள்ளது. இதுவரை காலமும் சிலரது பெயர்களை மாவீரர் பட்டியலில் இணைக்கவில்லை. இந்த நிலையில் தான் இது நடந்துள்ளது. TCC வெளியிட்டுள்ள அறிக்கை கீழே…

2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழில் விடுதலைக்காக வீர சாவைத் தழுவியவர்களின் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்பட்டவர்களின் தமிழ் விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் கஸ்ரோ உட்பட எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு

இது ஒரு வீரம் பொறிந்த உணர்வு நிறைந்த கனியான ஆயிரம் கனவுகளை எம்முடன் கொண்டு வந்துள்ள ஒரு நிகழ்வு. இதற்கான பொழுதுகளிலும் நம் உயிராய் நேசித்த தாய் மண்ணை கையிலும் மனதிலும் உறுதியாய் அணைத்துக்கொண்ட உன்னத வீரர்களின் வீரத்தை உணர்த்தும் நிகழ்வு. வார்த்தைகளால் விளக்க முடியாத வரலாறு படைத்த தமிழ் விடுதலை வேங்கைகளின் நிகழ்வு, இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.

பொதுச் சுடரினை தமிழீழ விடுதலை புலிகளின் காவல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் பிரதாப் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தேசியக் கொடியினை முன்னாள் சிறுத்தை படையணியின் தளபதியும் அனைத்துலக மகளிர் அணி பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். மாவீரர் பொதுப் படத்திற்கான மலர் மாலையினை முகுழினி சொர்ணம் அவர்கள் அணிவித்தார்கள்.

இன்றைய வீரவணக்கத்திற்குரிய மாவீர்களுக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
49 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
“எந்தவொரு முதலமைச்சராவது இவ்வளவு எளிமையாக இருப்பார்களா?” என்று கேட்டால், “நிச்சயமாக இருக்க மாட்டார்கள்” என்பது
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனியப் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 600
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்ததை அடுத்து, சோமாலியாவின் சிறந்த
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்க
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அதிமுக-வின் சீனியர் விக்கெட்டுகளான சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் ஏன் இன்னும் தவெக-வில் ஐக்கியமாகவில்லை என்பத
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net