← முகப்பு செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 2300 வீரர்களின் உயிர்களை ரோபோக்கள் காப்பாற்றியதாக உக்ரைன் ராணுவம் மதிப்பீடு செய்துள்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
ரஷ்யாவிற்கு எதிரான போரில் 2300 வீரர்களின் உயிர்களை ரோபோக்கள் காப்பாற்றியதாக உக்ரைன் ராணுவம் மதிப்பீடு செய்துள்
உக்ரைன் ராணுவம் போர்க்களத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்துகிறது

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 2300 வீரர்களின் உயிர்களை ரோபோக்கள் காப்பாற்றியதாக உக்ரைன் ராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு இடையே தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர், நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது இயந்திரங்களின் போராக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து நீடித்து வரும் போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களை உக்ரைன் ராணுவம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆளில்லா அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் ராணுவம் விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அதிகமாக போர் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளில் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்கு ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோபோக்கள் எல்லைக்கு புறம்பே தோண்டப்பட்டுள்ள ஆழமான குழிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட ரஷ்யா எல்லைகள் வழியாகச் சென்று நிரப்பப்பட்ட வெடிபொருட்களை வெடிக்கச் செய்கின்றன. இந்த ரோபோக்களை போர்க்களத்தின் பல மைல்கள் தொலைவிற்கு அப்பால் இருக்கும் மனிதர்களால் மிக எளிதாக இயக்க முடியும். இதன்மூலம் கணிசமான அளவில் மனித உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 22,000 க்கும் அதிகமாக ஆளில்லா இயந்திரங்களை உக்ரைன் வாங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும் ஒரு சிப்பாயைக் கூட போர்க்களத்திற்கு அனுப்பாமல், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி ஒரு ரஷ்யா நிலையைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். போர் முன்னணி நிலைகளில் வெடிபொருட்கள், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு செல்லவும், காயமடைந்த வீரர்களை வெளியேற்றவும், உளவுப் பணிகளை மேற்கொள்ளவும் ஆளில்லா ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
2
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
3
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
4
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
5
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
6
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி
7
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net