← முகப்பு செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர
ஹேமசிறி, பூஜித்துக்கு எதிரான ஈஸ்டர் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஜூன் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியாக கடமையிலிருந்து தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்குகளுக்குத் தேவையான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, வழக்குகளை ஜூன் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net