← முகப்பு செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காணொளி காட்ச

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காணொளி காட்ச
மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் ‘மஞ்சணத்தி’ பட துணுக்கு காணொளி வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காணொளி காட்சி வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘மஞ்சணத்தி’ திரைப்படம், மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ‘வாழை’ படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமை கால வாழ்க்கையை மையமாக கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் துணுக்கு காணொளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் படக்குழு கூடுதல் தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான இளையராஜா, தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்திலும் இணைந்துள்ளார். இதனால் அவரது இசையில் உருவாகும் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net