மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த ஒப்புதல் ஒரு முக்கியமான தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்து, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள இணக்கப்பாடு எட்டியுள்ளதை இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த ஒப்புதல் ஒரு முக்கியமான தருணத்தில் கிடைத்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும்.
தனியார் துறையின் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக முதலீட்டுச் சூழல்ஈ போட்டித்திறன், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியமாகும்.
அத்துடன், செலவுகளைப் பிரதிபலிக்கும் விலை நிர்ணய முறையைப் பேணுகின்ற அதேவேளையில், செயல்திறன் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை மேம்படுத்துவதற்காக எரிபொருள்’கியூ ஆர்’ முறையை வலுப்படுத்த வேண்டும். சந்தை நம்பிக்கை மற்றும் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரக் கொள்கை குறித்த தெளிவான மற்றும் நிலையான தகவல்தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் பொருளாதார மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதற்காக வர்த்தகம்,முதலீடு, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் அது எடுத்துரைத்துள்ளது.