← முகப்பு செய்திகள்

மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம் என அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ரமேஷ் உறுதி அளித்துள்ளனர்.

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம் என அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ரமேஷ் உறுதி அளித்துள்ளனர்.
அமைச்சர்கள் பேச்சு

தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீ முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். திருச்சி கிழக்கு தொகுதி இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது: நான் இங்கு அமைச்சராக இருக்கக் காரணம் விஜய்க்காக மக்கள் அளித்த வாக்குகளே காரணம். மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம் என பேசினார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் ரமேஷ்: சின்ன பசங்க என்று ஏளமனாக பேசாதீர்கள். சின்ன பசங்க யார் என்று நிரூபிப்பார்கள் என்று முன்பு பிரசாரங்களில் கூறினேன். இப்போதும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த சின்ன பசங்க, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என்று கூறிக்கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
09 Jun 2026
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
19 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
32 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
விஜய் தொடங்கிய ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net