← முகப்பு செய்திகள்

பைசன் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்கப்போவதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
பைசன் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்கப்போவதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த

பரியேறும் பெருமாள் முதல் பைசன் திரைப்படம் வரை அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பைசன் படம் வெற்றியைத் தொடர்ந்து, கர்ணனுக்கு அடுத்து தனுஷூடன் மீண்டும் கைக்கோர்க்க இருந்தார். கர்ணன் படத்தின் வெற்றியால் தனுஷ் – மாரி கூட்டணி மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் உருவானது. வரலாற்று கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகப் போகிறது என்று கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் காரணமாகவும் தனுஷின் கால்ஷீட் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமானது.

இந்த நிலையில், இப்படம் தொடங்குவதில் தாமதமாவதால் அதற்குள் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை எடுக்க மாரி செல்வராஜ் முடிவெடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், தனது அடுத்த சிறிய பட்ஜெட் படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மாரி. ‘மஞ்சணத்தி’ என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இளையராஜாவுடன் மாரி இணைய உள்ளது குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே, தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவிலேயே இப்படத்தின் வேலைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net