← முகப்பு செய்திகள்

பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக
இயக்குநர், நடிகரை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கிறார் பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து தானே இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் பெறும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது பிரதீப் ரங்கநாதனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த ‘எல்ஐகே’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net