← முகப்பு செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு லோரி ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அ

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு லோரி ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அ
ஆப்கானிஸ்தான்: அகதிகளை ஏற்றி சென்ற லோரி கவிழ்ந்து 22 பேர் பலியாகினர்

பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு லோரி ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், காபூல் நகரை நங்கர்ஹார் மாகாணத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அந்த லோரி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி, லாரியில் இருந்த அகதிகள் பலர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தவிர, 36 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தகவலை மாகாண ஆளுனரின் செய்தி தொடர்பாளர் அப்துல் மாலிக் நியாஸ் உறுதிப்படுத்தி உள்ளார். விபத்தில் சிக்கியவர்களில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்களும் அடங்குவர். காயமடைந்த நபர்கள் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் தூங்கியபடி வாகனம் ஓட்டியதில் பள்ளத்தில் லோரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என மாகாண பொது சுகாதார இயக்குநர் அமினுல்லா ஷெரீப் கூறியுள்ளார். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
2
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
3
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
4
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
5
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
6
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி
7
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net