← முகப்பு பதிவு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாக சுரேஸ் சாலேவின் மகன் தெரிவித்துள்ளார்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 2 பார்வைகள்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாக சுரேஸ் சாலேவின் மகன் தெரிவித்துள்ளார்
சுரேஸ் சாலேக்கு மனக்குழப்பம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாக சுரேஸ் சாலேவின் மகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுரேஸ் சாலேவோ, தனக்கு எதிராக ஈஸ்டர் விசாரணைகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சானி அபேசகரவை அகற்ற வேண்டுமென கோரியுள்ளார்.

அத்துடன் தான தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கும் பதிலாய் வேறு ஒரு அறை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனிடையே சாலேயின் விடுதலைக்காக சத்தியாக்கிரகத்தில் இருக்கும் ஒருசிலர் சுரேஸ் சாலே விடுதலையாகும் வரை சத்தியாக்கிரகம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் விமல் வீரவன்சவோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அல்லாமல் வேறு ஏதேனுமொரு சட்டத்தில் சாலே விசாரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டால் தமக்குப் பிரச்னை இல்லை என புதிய விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மக்களைச் சந்தேகத்துடன் பார்த்தவர்கள்,காலம் முழுக்க முஸ்லிம்களைப் பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லி அரசியல் செய்தவர்கள்,தமது அரசியல் கொள்கைக்குத் தொடர்ச்சியாக வலுசேர்க்கும் வகையில் இரு பெரும் சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கி வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் வீரியமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றவர்கள் இன்று சுரேஸ்சாலேவிற்கு எதிராக அந்தச்சட்டம் பாய்ந்தபோது திடீர் ஜீவ காருண்ய்ம் வெளிப்படுத்திவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் செய்திகள்
பதிவு
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான்
27 நிமிடங்கள் முன்னர்
பதிவு
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவ
1 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்தில் ஓக் மர மயிர் கொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரவலாகப் பரவி வருகிறது. முதல்
4 மணி நேரம் முன்னர்
பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
சிலி தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளது. ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த, பெ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றும் தனது நாட்டின் முதல் நபராக ஆகவிருந்த சோமாலிய நடுவர்
5 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net