முன்னாள் எம்.பி. ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (27) அவ் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக நீதிவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இவ் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.