← முகப்பு தலையங்கம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்க

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 4 பார்வைகள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்க
இந்த இடம் வேண்டுமென்றால் எங்களை கொன்று இந்த இடத்தை எடுத்துக்கொல்லுங்கள் ; கதறும் பழங்குடியின மக்கள்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களின் வாழ்விடங்களுக்குப் பேரூராட்சி நிர்வாகம் திடீரென காலி செய்யக் கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற காரணத்தைக் காட்டி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டிற்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமூக மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறை தலைமுறையாக இதே இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நீடாமங்கலம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் துப்புறவுப் பணிகளை மேற்கொண்டு, இந்த ஊரையே சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களாகக் குறைந்த தினக்கூலிக்கு வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உழைப்பைக் கொட்டிய ஊரிலேயே தங்களுக்கு வசிப்பிடம் மறுக்கப்படுவதாக அவர்கள் கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு ஒட்டியுள்ள நோட்டீஸில் அவர்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு என நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி மக்கள் தங்களுக்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து அரசாங்க வரிகளையும் முறையாகச் செலுத்தி வருவதற்கான ஆதாரங்களை வைத்துள்ளனர். மேலும், தங்களின் குடியிருப்பைச் சுற்றிலும் பட்டா நிலங்கள் மட்டுமே உள்ளதாகவும், நீர்நிலை இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் இங்கு இல்லை என்றும் அப்பகுதி மக்கள் வாதிடுகின்றனர்.

திடீரென வீடுகளைக் காலி செய்யச் சொன்னால், இந்த வயதான காலத்திலும், வறுமையிலும் தங்களின் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு எங்குச் செல்வது என்று தெரியாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். தங்களுக்கு இதே இடத்தில் மாற்று ஏற்பாடாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று குடியிருப்புப் பகுதியை அரசு உருவாக்கித் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்ததை அடுத்து, சோமாலியாவின் சிறந்த
44 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
அதிமுக-வின் சீனியர் விக்கெட்டுகளான சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் ஏன் இன்னும் தவெக-வில் ஐக்கியமாகவில்லை என்பத
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் மிகவும் புகழ்பெற்ற ஜோதிடராக விளங்குபவர் பண்டிதர் சிவா சங்கர். சூப்பர்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 1-0 என்ற கணக்கில்
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விசிக (VCK) துணைப் பொதுச்செயலாளரும், பிரபல தொழிலதிபர் லாட்டரி
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net