← முகப்பு செய்திகள்

தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின்
விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கிறார் அட்லீ – பிரியா அட்லீ

தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய அவர், ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கினார். தமிழில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, 2023-ம் ஆண்டு பாலிவுட்டிலும் தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து நடத்தும் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net