← முகப்பு செய்திகள்

தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது கு

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது கு
தமிழ்நாட்டை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தினார்

தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமாரின் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையின் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டினை உயர்த்துவது, உயர்தர சுற்றுலா கட்டமைப்பினை உருவாக்குதல், புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் முன்னெடுத்தல், புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், தொழிலாளர் பயிற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மூலம் சுற்றுலா நிர்வாகத்தின் திறனை உயர்த்துதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சீ. ஸ்வர்ணா, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ம. சு. சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி. லட்சுமி பிரியா, சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net