← முகப்பு செய்திகள்

சாய் சுதர்ஷன் ‘ஹிட் விக்கெட்’ சர்ச்சை – விதிகள் கூறுவது என்ன?

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
சாய் சுதர்ஷன் ‘ஹிட் விக்கெட்’ சர்ச்சை – விதிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI

ஐபிஎல் 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக 255 ரன்கள் என்கிற இமாலய இலக்கை துரட்டி விளையாடியபோது சிறப்பாக தனது ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் துர்திருஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்த அவுட் கிரிக்கெட் அரங்கில் விவாதப் பொருளாகி உள்ளது.

குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு 20 ஓவர் முடிவில் 254 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசியிருந்தார்.

255 ரன்கள் என்கிற சவாலான இல்லை துரத்தி விளையாடிய குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை எடுத்து தொடக்கம் அமைத்து கொடுத்தார் சாய் சுதர்ஷன்.

மறுபுறம் விளையாடிய ஷுப்மன் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் ஜேக்கப் டஃபி வீசிய மூன்றாவது ஓவரை எதிர்கொண்ட சாய் சுதர்ஷன் ஆஃப் திசையில் வந்த பந்தை பாயின்ட் நோக்கி கட் செய்தார்.

பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. ஆனால் பேட்டிங் கிரீஸ் உள்ளே அசாதாரணமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

பந்தை அடித்த வேகத்தில் அவரது கையிலிருந்து நழுவிய பேட் ஸ்டம்ஸ் மீது பட்டு பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் முறையில் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. முக்கியமான சேஸிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்டர் இவ்வாறு துர்திருஷ்டவசமாக ஆட்டமிழந்ததற்கு ரசிகர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் ஹிட் விக்கெட் விதிகள் தொடர்பான விவாதங்களும் எழுந்தன.

கிரிக்கெட் அம்பயரான அனில் சௌத்ரி இது ஹிட் விக்கெட் அல்ல என்று வாதிடுகிறார்.

குஜராத், பெங்களுரு, ஐபிஎல்

பட மூலாதாரம், ANI

இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், "இந்த ஹிட் விக்கெட் தொடர்பான வீடியோவில், பேட்டர் தனது ஷாட்டை ஆடி முடித்த பிறகு, அவரது பேட் ஸ்டம்புகள் மீது விழுவதையும், இதனால் பெய்ல்ஸ் கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது.

இது ஹிட் விக்கெட் தொடர்பான விதி 35.2 ஆகும். பேட்டருடைய பேட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது அவருடைய எந்தவொரு பொருளும் பந்தை எதிர்கொண்டு, ஷாட்டை முழுமையாக விளையாடி முடித்த பிறகு ஸ்டம்பில் விழுந்தால், அது ஹிட் விக்கெட் கிடையாது.

இங்கும் அதுதான் நடக்கிறது. அவர் தனது ஷாட்டை விளையாடி முடித்துவிட்டார், ஒட்டுமொத்த செயல்முறையும் முடிவடைந்துவிட்டது. எனவே, இது ஹிட் விக்கெட் அல்ல." என்று தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் எம்.சி.சி விதிகளின் 35.1 பிரிவு ஹிட் விக்கெட் தொடர்பாக விவரிக்கிறது.

"பந்துவீச்சாளர் பந்தை வீசிய பிறகும் பந்து தொடர்ந்து ஆட்டத்தில் இருக்கும்போதும் பேட்டரின் மட்டை அல்லது உடல் ஸ்டம்ப் மீது பட்டால் அவர் ஹிட் அவுட்டாக கருதப்படுவார்" என்று அந்த விதி தெரிவிக்கிறது.

அதன் கீழ் பல்வேறு சூழ்நிலைகளில் ஹிட் விக்கெட் விவரிக்கப்பட்டுள்ளன.

35.1.1.1 பந்தை எதிர்கொள்ள தயாராகும்போது அவரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

35.1.1.2 பந்தை எதிர்கொண்ட உடனே முதல் ரன் எடுக்க முயற்சிக்கும்போது

35.1.1.3 பந்தை விளையாட எந்த முயற்சியும் செய்யப்படாத பட்சத்தில், முதல் ரன் எடுக்க புறப்படும்போது, பேட்டருக்கு பந்தை விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்த உடனேயே இது நிகழ்கிறது என நடுவர் கருதினால்

35.1.1.4 ஸ்டம்பை பாதுகாக்க பந்தை இரண்டாவது முறையாக அடிக்க முற்படும்போது (பந்து சட்டப்பூர்வமாக ஒரு முறைக்கு மேல் அடிக்கப்பட்டால்)

ஹிட் அவுட் ஆகியும் நாட் அவுட் இல்லாத சூழல்களை 35.2 பிரிவு விளக்குகிறது. அம்பயர் அனில் சௌத்ரி இந்த விதிகளை மேற்கோள்காட்டி தான் பேசியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net