← முகப்பு செய்திகள்

சர்வதேச அளவில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும்தான் திராட்சை பழம் ஆண்டு முழுவதும்

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
சர்வதேச அளவில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும்தான் திராட்சை பழம் ஆண்டு முழுவதும்

மண் வாசனை
விதையில்லா பச்சை திராட்சை

இதுகுறித்து ஓடைப்பட்டியைச் சேர்ந்த பச்சை திராட்சை விவசாயி மகேஸ்வரனிடம் பேசினோம். "நாள் ஒரு ஏக்கரில் பச்சை தாம்சன் சீட்லெஸ் திராட்சை பயரிட்டுள்ளேன். இந்த வகை திராட்சை பன்னீர் கருப்பு திராட்சையைவிட அதிக வருவாய் கொடுக்கிறது. ஆனால், ரிஸ்க் கொஞ்சம் அதிகம். இந்தத் திராட்சை பச்சை நிறத்தில், தோல் மென்மையாக இருக்கும். மழை பெய்தால், பழம் வெடித்து வீணாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். கருப்பு பன்னீர் திராட்சையில், இந்த மாதிரி சின்ன மழைக்கு எல்லாம் தோல் வெடிக்காது. இருந்தாலும் வருமானம் அதிகம். வருடத்திற்கு ஒரு முறை நல்ல சீசனிலும், ஒரு முறை டல் சீசனிலும் இரண்டு முறை அறுவடை செய்துவிடலாம். ஒரு ஆறு மாதங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு, எங்களது வேறு நிலத்தில் பன்னீர் திராட்சை, மாற்று பயிர் சாகுபடியி கவனம் செலுத்த முடியும்.

திராட்சைக்கான பந்தலை ஏற்கெனவே எல்லா விவசாயிகளும் அமைத்திருப்பதால் ஆரம்ப காலச் செலவை கணக்கில் வைப்பது. இல்லை ஒரு ஏக்கர் பச்சை திராட்சைக்கு, ஒரு சீசனுக்கு கிட்டத்தட்ட 120 வேலையாட்கள் தேவை. மேலும், இந்த மாவட்டத்திலேயே இந்தப் பகுதிதான் மிகவும் வறட்சியான பகுதி தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்காது. இதுபோன்ற காரணங்களால் கடுமையாக கஷ்டப்பட்டுதான் விவசாயம் செய்துவருகிறோம்.

ரூ. 6 லட்சம் வருவாய் நிச்சயம்

பின்னர் ஒரு டிராக்டர் மாட்டுச் சாணம் ஐந்தாயிரம் வரை விலை கொடுத்து வாங்குகிறோம். ஆட்டுச் சாணமும் கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைத்து செடிகளின் வேர்பகுதியில் ஊற்றுவது என்று தொடங்கி ரசாயன மருந்து என்று லட்சத்து 20 ஆயிரம் வரை செலவாகும். திராட்சை கொடியை கவாத்து அடித்து, மீண்டு தலைப்பு எடுக்க 15 நாள் வரையாகும். அதற்கு பின்னர் இலைகளைக் கிள்ளி கட்டுக்குள் கொண்டு வரவேண்டும், நச்சு தள்ளவேண்டும். பின்னர் திராட்சை குலைகளை கட்ட வேண்டும் மழை பெய்யும்போது தேவையான எல்லா வகையான இரசாயன மருந்து அடிக்க வேண்டும். இப்படி 100 முதல் 120 நாட்களில் திராட்சை அறுவடை செய்யத் தொடங்கலாம்.

வழக்கமாக கிலோ ரூ. 100 ரூபாய்க்கு வியாபாரிகள் எடுப்பார்கள் கூடுதலாக 200 வரை போயுள்ளது. நூறு ருபாய் விலை வைத்தாலே ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஐந்தரை முதல் லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதில் டல் சீசனில் மழை பெய்து. காய்ப்பு சரியில்லாமல் போகும்போது, அது ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை நஷ்டமாகும். இதனால், ஆண்டுக்கு ஒரு முறை ஒரு சீசன் மட்டும் அறுவடை செய்யும் நடைமுறையையும் இங்குள்ள விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளார்கள்.

தேனி திராட்சைக்கு தேவை அதிகம்

இங்கு விளையும் பச்சை திராட்சை பெரும்பாலும் நாங்கள் நவம்பர், டிசம்பர், முதல் ஏப்ரல் வரை சாகுபடி செய்து அறுவடை செய்வோம். இந்தக் காலங்களில்தான் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் என்பதால் எங்கள் கிராட்சைக்குத் தேவை அதிகம் இருக்கும். இந்த மாதங்களில் தேனி மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் திராட்சை அறுவடை செய்யாத விளைவிக்கப்படாத காலம் என்பதால் தேனி மாவட்டத் திராட்சைக்கு கிராக்கி அதிகம். இந்தத் திராட்சையில், வைட்டமின் சி, வைட்டமின் கே. ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எங்கள் திராட்சை, அதிகளவில் கேரளாவிற்கும், மகாராஸ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை திராட்சை பெரும்பான்மையான நேரங்களில் பெரியளவில் கஷ்டத்தைக் கொடுக்கும். அதைப் போலவே பெரியளவில் விவசாயியைத் தூக்கிவிடவும் செய்யும் நிலையில்லா விலை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேடு பள்ளமாக வைத்திருக்கும். இந்த விவசாயத்தைக் கண்ணும் கருத்துமாக செய்யும்போது, ஏக்கருக்கு வருடம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்" என்றார் விவசாயி மகேஸ்வரன்

திராட்சை தொடர்பான மதிப்புகூட்டு நிறுவனங்களை அமைத்தால், தேனி மேன்மேலும் வளர்ச்சி பெறும்'

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net