← முகப்பு செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 8 பார்வைகள்
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாகச் சென்றனர்.

ஆனால், போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, வல்லம் டிஎஸ்பி காயத்ரி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டி, அவர்களைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களில் 5 பேரை ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர். அதன்பின்னர், விவசாயிகள் ஆட்சியர் ஆர்.ரேவதியிடம் கோரிக்கை மனுக்களை அளித்ததுடன், ஒருமையில் பேசிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

முன்னதாக, குறைதீர் கூட்டத்தில் மனு வழங்க பச்சைத்துண்டு அணிந்து வந்தவர்களை போலீஸார் நிறுத்தி பச்சைத் துண்டுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என கூறினர். இதையடுத்து, பலரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் துரோகம் இழைத்துவிட்டார்.

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சாமிநாதன் தலைமையில், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு விவசாயிகள் முழங்காலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேகோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத்தலைவர் சுந்தர் தலைமையிலும், நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவர் விஜயராஜ், செயலாளர் சக்திவேல் தலைமையிலும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அவைத் தலைவர் பண்டரிநாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
விஜய் தொடங்கிய ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net