← முகப்பு செய்திகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெ

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெ
பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வெடித்த மோதலில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிடத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார். முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. 2-வது முறையாக பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. ஆர்செனல் சார்பில் எபிரேஸி, கேப்ரியல் மகல்ஹேஸ் கோல் அடிக்க தவறினார்கள். பிஎஸ்ஜி சார்பில் நுனோ மெண்டிஸ் கோல் அடிக்க தவறினார். இந்தப் போட்டியில் 72 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 4 முறை கோல் அடிக்க முயன்றது. டிபென்ஸில் பலம்வாய்ந்த ஆர்செனல் அணி சிறப்பாகவே தடுத்து வந்தது. சாம்பியன்ஸ் லீக்கின் மன்னன் ரியல் மாட்ரிட் அணிக்குப் பிறகு பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்தநிலையில், செம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கொண்டாட்டக்காரர்கள், ரசிகர்கள் விளையாட்டு மைதானத்திலேயே பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். அப்போது ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
2
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
3
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
4
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
5
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
6
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி
7
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net