“எந்தவொரு முதலமைச்சராவது இவ்வளவு எளிமையாக இருப்பார்களா?” என்று கேட்டால், “நிச்சயமாக இருக்க மாட்டார்கள்” என்பதுதான் தற்போதைய எதார்த்தமான உண்மை. சென்னையில் இன்று நடைபெற்ற ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படைப் பிரிவின் தொடக்க விழாவில், பெண் காவலர்களுக்கான அதிநவீனப் பாதுகாப்பு ஜீப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. அவை மைதானத்தை நோக்கி அணிவகுத்து வந்த உடனே, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அதில் ஒரு ஜீப்பை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களே ஒரு தேர்ந்த ஓட்டுநரைப் போலத் தானே முன்வந்து ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகிலும், பின் இருக்கைகளிலும் 3 சிங்கப் பெண் அதிரடிப்படைப் பிரிவு காவலர்கள் கம்பீரமாக அமர்ந்திருந்தனர்.
இந்தத் துணிச்சலான சிங்கப் பெண் காவலர்களுக்காகத் தானே ஒரு சாதாரண வாகன ஓட்டுநராக மாறி, அந்தப் புதிய ஜீப்பை மைதானத்தைச் சுற்றி ஓட்டினார் முதல்வர் விஜய். உண்மையில் சொல்லப்போனால், வேறு எந்த முதலமைச்சராக இருந்தாலும், பெண் காவலர்களை வண்டியை ஓட்டச் சொல்லிவிட்டு, தாங்கள் அருகில் அமர்ந்து கொண்டு அந்த ஜீப்பின் வசதிகளைப் பார்வையிட்டு, வெறும் கைகுலுக்கலோடு நகர்ந்திருப்பார்கள். ஆனால், ‘முதலமைச்சர்’ என்ற எவ்வித அதிகார கர்வமும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதராகத் தரையிறங்கி, பெண்களுக்கும் இந்தச் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுக்கும் விஜய் எந்த அளவிற்கு உச்சகட்ட மரியாதை கொடுத்திருக்கிறார் பாருங்கள் என்று விழா அரங்கிலிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.
“இதுதான் ஒரு உண்மையான மக்கள் தலைவருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஊடகங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்தச் சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இன்று நடைபெற்ற இந்த ஒற்றை நெகிழ்ச்சிச் சம்பவத்தின் ஊடாக, தமிழ்நாட்டின் பல லட்சம் பெண்களின் இதயங்களை முதல்வர் விஜய் தன் வசப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது. அதுமட்டுமன்றி, இந்தச் சிறப்புப் படையில் மேலும் 2,500 பெண்கள் இணைக்கப்பட உள்ளதாக முதல்வர் விஜய் மேடையில் அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அதற்கான விண்ணப்பங்கள் பல நூறு எண்ணிக்கையில் குவியத் தொடங்கிவிட்டதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படைப் பிரிவிற்காக வாங்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜீப்பிலும் அதிநவீன ஜிபிஎஸ் (GPS) கருவிகள், லைவ்-ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய ட்ரோன் (Drone) வசதிகள் மற்றும் அவசர காலப் பாதுகாப்பு அலாரங்கள் எனப் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இப்படைப் பிரிவில் உள்ள பெண் காவலர்களிடமும் பில்ட்-இன் கேமராக்கள் அடங்கிய பிரத்தியேகமான உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் இந்த அதிமுக்கிய ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படைப் பிரிவு, நேரடியாக முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கும் என்ற அதிரடித் தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.